SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Riassunto dell'episodio

உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான Binance மீது மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இணையத்திருட்டுச் சம்பவம், டிஜிட்டல் நாணயங்களின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? மற்றும் சாதாரண முதலீட்டாளர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பாடங்கள் குறித்து விளக்குகிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா, “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast The crypto heist that shook the world: Who is behind it?

Episodi

14830-

கிரிப்டோ உலகை உலுக்கிய திருட்டு: பின்னணியில் இருப்பவர்கள் யார்?

உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான Binance மீது மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இணையத்திருட்டுச் சம்பவம், டிஜிட்டல் நாணயங்களின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? மற்றும் சாதாரண முதலீட்டாளர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பாடங்கள் குறித்து விளக்குகிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா, “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast The crypto heist that shook the world: Who is behind it?

23 Nov 2026
14829-

குடியேற்ற நாடாக அவுஸ்திரேலியாவின் செல்வாக்கு குறைகிறதா?

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பான OECD வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவின் குடியேற்ற நிலை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Is Australia losing its appeal as a Migration destination?

23 Nov 2026
14828-

இன்றைய செய்திகள்: 23 நவம்பர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (23 November 2026 - Monday)

23 Nov 2026
14827-

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

திருப்பரங்குன்றம் தூணில் நவ.24 ஆம் தேதி காா்த்திகை தீபம் ஏற்றலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு; திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியா?; தமிழக முதலமைச்சர் விஜய் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from the past 7 days

23 Nov 2026
14826-

What does Kumanjayi mean? Understanding Sorry Business - ‘குமன்ஜெய்’ - பூர்வீகக் குடிமக்களின் துயர் பகிரும் முறை

When someone dies, families and communities may have cultural practices and responsibilities around mourning. For many Aboriginal and Torres Strait Islander people, this is known as Sorry Business. There is no single way to observe Sorry Business. Practices differ between communities, families and language groups. Learn about what Sorry Business can involve, what the term “Kumanjayi” means in some Central Australian communities, and how you can show care when someone is grieving. - ஓர் உயிர் இந்த மண்ணிலிருந்து விடைபெறும்போது, அது விட்டுச்செல்வது வெறுமையை மட்டுமல்ல. அந்தத் துயரைச் சுமந்து கடக்க, குடும்பங்களும் சமூகங்களும் தமக்கென்று சில பண்பாட்டு மரபுகளையும் கடமைகளையும் கைக்கொள்ளக்கூடும். பூர்வீகக்குடி மற்றும் Torres நீரிணைத் தீவுவாழ் மக்கள் பலர், துக்கம் காக்கும் இந்த மரபுகளை Sorry Business என்று அழைக்கிறார்கள். #sbsaudiopodcast - #sbsaudiopodcast What does Kumanjayi mean? Understanding Sorry Business

23 Nov 2026